ஆப்நகரம்

World Tourism Day; நம்ம ஊரு 'நயாகரா' ​ஒகேனக்கல்​ நீர்வீழ்ச்சி ஒரு பார்வை!

நம்ம ஊரு 'நயாகரா' என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி உள்ள பகுதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆறு, குடகு மழையில் சிறு ஓடையாக தலைக்காவிரி உற்பத்தியாகி பிறகு கர்நாடக மற்றும் தமிழகத்தில் பறந்து விரிந்து காவிரி ஆறாக ஓடுகிறது. காவிரி ஆறு ஒடும் இடங்களில் ஆங்காங்கே இயற்கை சூழலுக்கு ஏற்றாற்போல் அங்கு சுற்றுலா தளமாக அமைத்து, பொழுதை கழிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அது போன்று ஒகேனக்கல்லில் இயற்கையாக அமைந்துள்ள பல்வேறு நீர்வீழ்ச்சி உள்ளது. அங்கு ஐந்தருவி,தொடர் அருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 27 Sep 2022, 3:15 pm

ஹைலைட்ஸ்:

  • 1970 ஆண்டிலிருந்து செப்டம்பர் 27 ம் தேதி உலக சுற்றுலா தினத்திற்கு ஐநா அனுமதி
  • நம்ம ஊரு 'நயாகரா' என அழைக்கப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
  • சுடசுட சமைக்கும் மீன் குழம்பு மற்றும் மீன் வருவலுக்கு தனி ரசிகர் பட்டாளம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஒகேனக்கல்
ஒகேனக்கல்
பணத்தை தேடி மக்கள் ஆண்டுதோறும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பணத்தை சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். ஆண்டுதோறும் உழைத்தாலும், நிம்மதியாக ஒரு நாள் மனதுக்கு பிடித்த சுற்றுலா தளத்திற்கு குடும்பத்துடன் சென்று அங்கு பொழுதை கழித்து நிம்மதிஅடைகின்றனர்.

1970 ஆண்டிலிருந்து செப்டம்பர் 27 ம் தேதி உலக சுற்றுலா தினத்திற்கு ஐநா அனுமதியளித்தது. அதன் பிறகு 1980 ம் ஆண்டு முதல் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது சுற்றுலா துறை தான் மிகப்பெரிய தொழில் துறையாக உள்ளது. உணவகம், தங்கும் விடுதி, பொழுது போக்கு தளங்கள், போக்குவரத்து, வணிக விற்பனை என 5 யும் உள்ளடக்கியது தான் சுற்றுலா தளம்.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், சென்னை மெரீனா,குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதே போல் நம்ம ஊரு 'நயாகரா' என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி உள்ள பகுதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆறு, குடகு மழையில் சிறு ஓடையாக தலைக்காவிரி உற்பத்தியாகி பிறகு கர்நாடக மற்றும் தமிழகத்தில் பறந்து விரிந்து காவிரி ஆறாக ஓடுகிறது.


காவிரி ஆறு ஒடும் இடங்களில் ஆங்காங்கே இயற்கை சூழலுக்கு ஏற்றாற்போல் அங்கு சுற்றுலா தளமாக அமைத்து, பொழுதை கழிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அது போன்று ஒகேனக்கல்லில் இயற்கையாக அமைந்துள்ள பல்வேறு நீர்வீழ்ச்சி உள்ளது. அங்கு ஐந்தருவி,தொடர் அருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது.

இப்பகுதிகளில் கடந்த ஆண்டுகளுக்கு முன் சினிமா படபிடிப்பு எடுக்கும் இடமாக அமைந்திருந்தது. இங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி உள்ளிட்ட அந்த காலத்து நடிகர்களும், ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற இந்த காலத்து நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில், கர்நாடக மற்றும் தமிழகத்தை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது.

2024-ஐ குறிவைக்கும் மு.க.அழகிரி? கேபினட் அமைச்சர் டார்கெட்?

இங்கு யானை,மான் போன்ற ஏராளமான வன உயிரினங்கள் வாழ்கிறது. இவைகள் அவ்வப்போது சாலைகளை கடக்கும் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.
ஒகேனக்கல்லின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆண்டு முழுவதும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து, ஆயில் மாசஜ் செய்துகொண்டு அருவியில் குளித்த பிறகு அங்கு சுடசுட சமைக்கும் மீன் குழம்பு மற்றும் மீன் வருவலை சாப்பிட்டு செல்வார்கள்.

இங்கு சமைக்கும் மீன் குழம்பை ருசிக்கவே தமிழகம் மட்டும் அல்லாமல், கர்நாடகா ,கேரளா, ஆந்திரா மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் எத்தனையோ சுற்றுலா தளங்கள் இருந்தாலும், ஒகேனக்கல்லில் ஆர்பரித்துக்கொட்டும் அருவி மற்றும் பரிசல் சாவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் 2,3 நாட்கள் குடும்பத்துடன் தங்கி பொழுதை கழித்து மகிழ்வார்கள். இந்த உலக சுற்றுலா தினத்தில் மக்கள் மனதில் இருப்பது முக்கியமாக நினைவுகூரப்படும் இடங்களில் ஒகேனக்கல் இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி