ஆப்நகரம்

Hogenakkal காவிரி ஆற்றில் திடீர் வெள்ளம்... சுற்றுலா பயணிகளுக்கு தடை!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் விநாடிக்கு 25,000 கனஅடி நீர் செல்வதால் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 18 May 2022, 8:42 am

ஹைலைட்ஸ்:

  • காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
  • ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil HOGENAKKAL WATERFALLS
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஒகேனக்கலில் விநாடிக்கு 25,000 கனஅடி நீர் செல்வதால் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்(Hogenakkal) காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு, கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழகம் வந்தடைந்தது. இதனால், நீரின் வேகம் படிப்படையாக அதிகரித்து தற்போது விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை தொட்டவாறு தண்ணீர் செல்வதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முனைவரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன்... தோள் மீது தட்டி வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும், நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர் வரத்து குறித்து அளவிடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மேட்டூர் அணைக்கு நீர் வத்து அதிகரிக்ககூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி