ஆப்நகரம்

Hogenakkal: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்க​ தடை !

தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 Jun 2022, 12:17 pm

ஹைலைட்ஸ்:

  • காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
  • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்க தடை

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஒகேனக்கல்
ஒகேனக்கல்
கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இந்த நீர் வரத்தால் ஐந்தருவி மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிநீர் வந்தாலே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.

தருமபுரி கலெக்டராக கி.சாந்தி; சவால்களும் வாக்குறுதிகளும்!

தற்போது வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதாலும் மேலும் நீர் வரத்து அதிகரிக்ககூடும் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க அதிக வாய்ப்புள்ளது என எதிர்பாக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதே போல, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி