ஆப்நகரம்

இலவச மின் இணைப்புக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி…பிளான் போட்டு சிக்க வைத்த விவசாயி!

தருமபுரி அருகே இலவச மின்சாரம் வழங்க மின்வாரிய வணிக ஆய்வாளர் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது லஞ்சஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Jan 2022, 10:17 pm
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வெதரம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு இலவச மின்சாரம் பெற விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இலவச மின் இணைப்பு வழங்கிட வேண்டி கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் தருமபுரியை சேர்ந்த வேடியப்பன் என்பவரை அணுகிய போது அவர் மின் இணைப்பு வழங்க ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
Samayam Tamil Tn bribe arrest


ஆனால், விவசாயி முருகன் 15 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து இலவச மிசாரம் வழங்க மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் தவணையாக ரசாயனம் கலந்த 12 ஆயிரம் ரூபாயுடன் வந்த விவசாயி முருகன் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வேடியப்பனிடம் கொடுத்துள்ளார்.

அதனையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகர் தலைமையில் கொண்ட குழுவினர் வேடியப்பனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி