ஆப்நகரம்

ரோட்டில் சண்டை, ஆள்காட்டி விரலைக் கடித்துத் துப்பிய தொழிலாளி: பைக்கில் சென்றவருக்குச் சோகம்!

தர்மபுரியில் தெருவில் இருவருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மற்றொருவரின் வலதுகை ஆள்காட்டி விரலை கடித்து துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2021, 6:34 pm
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வேளாவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். வயது 30. இவர் ஒசூரில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil ரோட்டில் சண்டை, ஆள்காட்டி விரலைக் கடித்துத் துப்பிய தொழிலாளி: பைக்கில் சென்றவருக்குச் சோகம்!


இவர் வேளாவள்ளியிலிருந்து பாலக்கோட்டிற்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் நேற்று முன் தினம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மாந்தோப்பு அருகே வந்து போது, அவரை, 2பேர் வழி மறித்துள்ளனர்.

போதையிலிருந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில், அந்த இரண்டு பேரில் ஒருவரான பேளாரஹள்ளியை சேர்ந்த முனிவேல்(40) கூலித் தொழிலாளி குமாரைத் தாக்கி உள்ளார்.

மலை கிராம மக்கள் மடக்கி பிடித்து கைது; அனுமதி இல்லாமல் போராடியதால் அதிரடி!
மேலும் அவரது வலதுகை ஆள்காட்டி விரலை கடித்து துண்டித்துள்ளார். வலியால் துடித்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து முனிவேலை கைது செய்து விசாரணை செய்கின்றனர்.

அடுத்த செய்தி