ஆப்நகரம்

பட்டைய கிளப்பும் பாமக எம்எல்ஏ; ‘ஆக்சிஜன் ரெடி பண்ணுங்கப்பா’!

தருமபுரி மாவட்டம் தொப்பூர் மற்றும் லளிகம் ஆரம்ப சுகாதார நிலையங்களை பாமக சட்டன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 16 May 2021, 11:34 am
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா தடுப்பூசியும் மக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


இருப்பினும், இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இன்னமும் மக்களிடையே சற்று தயக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் மற்றும் லளிகம் ஆரம்ப சுகாதார நிலையங்களை பாமக சட்டன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கொரோனாவால் பிணவறை ‘ஹவுஸ்புல்’; கொளுத்தும் வெயிலில் கிடக்கும் உடல்கள்!

தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆக்சிஜன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் வசதி செய்தால் 30 கொரானா நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்க முடியும்.

பொதுமக்கள் அனைவரும் கொரானா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதேப்போல காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிசிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி