ஆப்நகரம்

கிணற்றில் விழுந்த குழந்தை; இறுதியில் நடந்தது இதுதான்!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிய மாவடிப்பட்டி கிராமத்தில் 4 வயது பெண் குழந்தை விளையாட சென்றது. அப்போது தவறி கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

Samayam Tamil 26 Jul 2021, 5:55 pm
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிய மாவடிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பிரகாஷ். விவசாயி. இவரது மகள் யோசிகா (4). இன்று மாலை குழந்தை யோசிகா விளையாட சென்றபோது அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
Samayam Tamil குழந்தை சடலம் மீட்கும் பணி நடக்கிறது
குழந்தை சடலம் மீட்கும் பணி நடக்கிறது


இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கமபக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அரூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் விரைந்து வந்தனர்.

இதன் பிறகு விவசாய கிணற்றில் இறங்கி குழந்தையை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. தண்ணீர் அதிகமாக இருந்ததால் கிணற்றில் இருந்த தண்ணீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

காவிரியில் தண்ணீர் வெளியேற்றம்; 35 ஆயிரத்து 733 கன அடியாக உயர்வு!

இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மீண்டும் கிணற்றில் இறங்கி குழந்தையின் சடலத்தை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதுகுறித்து கம்பை நல்லூர் காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி