ஆப்நகரம்

தடையை மீறி வன விலங்குகளை வேட்டையாட முயற்சி... வன அதிகாரிகள் கொடுத்த தண்டனை!

மொரப்பூர் வனச்சரகத்தில் விலங்குகளை வேட்டையாட முயன்றவர்களை பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Samayam Tamil 27 Oct 2021, 10:14 pm
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனக்கோட்ட பகுதிகளில் வன விலங்குகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்தது. இதனால்மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, வனப்பகுதிகளில் கூடுதல் ரோந்து பணியை மேற்கொள்ள மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமாருக்கு உத்தரவிட்டார்.
Samayam Tamil Dharmapuri news


மாவட்ட வன அதிகாரி உத்தரவின் அடிப்படையில், வாதாப்பட்டி பிரிவு வனவர் யாசின், வனக்காப்பாளர்கள் காளியப்பன், சுரேஷ், வனக்காவலர் சரித்திரன் ஆகியோர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கீழ்மொரப்பூர் காப்புக்காடு வனவிலங்கு தொட்டி சராகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது,புதர் மறைவில் இருசக்கர வாகனத்தை மறைத்து வைத்துவிட்டு எக்ஸ்லேட்டர் ஒயரிலான கம்பி வலைகளை செடிகளில் கட்டி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை சுற்றி வளைத்தனர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் வட்டம் பெருமாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்பாவு மகன் பூபதி வயது (23), சேலம் மாவட்டம் சிவதாபுரம் வட்டம் பெருமாம்பட்டி அஞ்சல் கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் தியாகராஜன் வயது (20 )என தெரியவந்தது.
புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன்!

இவரையும் மொரப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய வனத்துறையினர் இருவர் மீதும் வனபாதுகாப்பு குற்ற வழக்கு எண் 20/2021ல் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.2500 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

அடுத்த செய்தி