ஆப்நகரம்

ஒகேனக்கல் திறப்பு ஆனால் உள்ளே செல்ல இதை செய்திருக்க வேண்டும்: அரசு உத்தரவு!

ஒகேனக்கல் சுற்றுலா தலம் ஓராண்டுக்குபின் இப்போது திறக்க உத்தரவிடப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2021, 2:43 pm
தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் , இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஒகேனக்கல்லில் உள்ள இயற்க்கை அழகை கண்டு ரசித்தும் பரிசல் சவாரி செய்தும் அருவிகளில் குளித்தும் செல்வார்கள்.
Samayam Tamil ஒகேனக்கல் திறப்பு ஆனால் உள்ளே செல்ல இதை செய்திருக்க வேண்டும்: அரசு உத்தரவு!


இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பணியகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தளர்த்துபட்ட பிறகு பிற மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது.

அடுத்தடுத்து விழுந்து இறந்த மாடுகள்; பீதியில் உறைந்து போன விவசாயிகள்!
ஆனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அனுதிக்காத நிலையில் நாளை முதல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.


இதனால் சுற்றுலா பயணிகளும், அங்குள் பரிசல் ஓட்டிகள், சுற்றுலாவை சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் மகிழ்சியடைந்துள்ளனர். அதேவேளை, சுற்றுலா பயணிகள் கட்டாயம் இரண்டு தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்திரவு பிறபித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி