ஆப்நகரம்

இனி நான் சும்மா விடமாட்டேன்; போலீஸ் முன்பு எச்.ராஜா சபதம்!

இனி போலீசை சும்மா விடப்போவதில்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா புதிய சபதம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 18 May 2022, 10:28 pm
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்து இருந்தனர்.
Samayam Tamil எச்.ராஜா
எச்.ராஜா


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்நிலையில் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு (30)2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என கூறிய காவல் துறையினர் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தனர்.

ஆனால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போலீசாரின் உத்தரவை மீறி நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த போவதாக அறிவித்து விட்டு சம்பவ இடத்தை நோக்கி வந்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்?; முதல்வரை சந்தித்ததால் எடப்பாடி கோபம்!

இதனைத் தொடர்ந்து பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் எச்.ராஜாவை மடக்கி கைது செய்தனர்.

பின்னர் எச்.ராஜாவை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் ஏராளமானேர் சத்திரப்பட்டியில்‌ குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் எச்.ராஜாவை வெளியே விட வலியுறுத்தி பழனி-திண்டுக்கல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தி எச்.ராஜா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் பழனிக்கு புறப்பட்டார்.

அமைச்சர் அதிரடி அறிவிப்பு; பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி!

முன்னதாக எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

நான் இந்து மதத்தில் பிறந்தது தவறா? இந்து மதத்தில் மலைகளையும், ஆறுகளையும், குளங்களையும் வழிபட சொல்லி இருக்கிறது. அதற்காக பழனி வந்த என்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருக்கிறது.

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் அமைந்து உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பள உள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதை நான் கேட்டு விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு போலீசார் என்னை கைது செய்து இருக்கின்றனர். நான் இதை சும்மா விட போவதில்லை. இந்துக்களுக்கு நீதியை கண்டிப்பாக பெற்று தருவேன். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

அடுத்த செய்தி