ஆப்நகரம்

ஆசனூர் அருகே இருளில் மூழ்கிய 50 மலை கிராமங்கள்; தொடர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே மின் வயர் துண்டிக்கப்பட்டதால் 50 மலை கிராமங்கள் இருளில் மூழ்கி, தொடர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 24 Apr 2023, 6:26 pm

ஹைலைட்ஸ்:

  • ஆசனூர் அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய 50 மலை கிராமங்கள்
  • தொடரும் மின்தடையால் கடும் அவதி அடைந்துள்ளனர்
  • மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஆசனூர் அருகே இருளில் மூழ்கிய 50 மலை கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே மின் வயர் துண்டிக்கப்பட்டதால் 50 மலை கிராமங்கள் இருளில் மூழ்கி, தொடர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆசனூர் மலை கிராமங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகம்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை, ஆசனூர், கேர்மாளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.


நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு அடர் வனப்பகுதியில் பொதுமக்கள் அவதி:


இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலை கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதி பட்டு வந்தனர். மலைகிராமமான ஆசனூர், அரேபாளையம் , குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவள்ளம் என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் தடை:

மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிப்பட்டுவந்தனர். தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் கம்பி துண்டிக்கபட்டு விடுகிறது. மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் 1 நாள் அல்லது இரண்டு நாள் கழித்துதான் மின்பழுது சரி செய்யப்படுகிறது. இதே நிலைமை கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலைகிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனை ஏமாற்றிய ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி; உளவுத்துறை கிடுக்குப்பிடி விசாரணை..‌ நடந்தது என்ன?

பள்ளி மாணவ - மாணவிகள் படிக்க முடியாமல் அவதி:

இதனால் குடிநீர் இல்லாமலும், பள்ளி மாணவ - மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிபட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் ஒயர் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக 50 மலை கிராமங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி