ஆப்நகரம்

பல நாட்களுக்குப் பிறகு குறைந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்; 2,700 கன அடி நீர் வெளியேற்றம்!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக குறைந்து, வினாடிக்கு 523 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Oct 2022, 7:02 pm

ஹைலைட்ஸ்:

  • பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 523 கனஅடி நீர்வரத்து
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக குறைந்தது
  • மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
இதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நீதித்துறை இப்படிதான் இருக்க வேண்டும் - தமிழிசை 'நச்' பேச்சு!

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 523 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி