ஆப்நகரம்

வேற லெவலில் தயாராகும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி; அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு!

சித்தோடு அரசு பொறியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை அடுத்து 40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பல்வேறு பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 4 Dec 2022, 6:16 pm

ஹைலைட்ஸ்:

  • கல்லூரி மாணவர்கள் புகாரை அடுத்து அமைச்சர் உடனடி நடவடிக்கை
  • சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்
  • அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு
அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1400 மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் எடுத்து என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். அதேபோல் தினசரி வந்து செல்லும் மாணவ, மாணவிகளும், அங்கே தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் பலர் உள்ள இந்த கல்லூரி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அரசு பொறியியல் கல்லூரி ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் அரங்கம் ஒன்று கட்ட பூமி பூஜை நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துசாமி சென்றிருந்தார். அப்போது அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் அமைச்சரிடம் இக்கல்லூரியில் தார் ரோடு, குளியல் அறை வசதி, லைட் வசதி, உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை என புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி அரசு பொறியல் கல்லூரிக்கு சென்று சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை வசதி, குளியல் அறை புதுப்பித்தல், லைட் வசதி, பஸ்களை நிறுத்த பஸ் நிறுத்தம் மற்றும் எலக்ட்ரிக்கல் ஒர்க் என பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்க ஆய்வு மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து அமைச்சர் முத்துசாமியிடம் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் ஈரோடு மற்றும் பவானி பகுதியிலிருந்து அரசு பஸ் ஒன்று கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு வந்து செல்கிறது.

பறவைகளை வேட்டையாடினால் சிறை... வனத்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை!

அதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இருந்து வருகின்ற மாணவ, மாணவிகளுக்கு வசதியாக அரசு பஸ் ஒன்று ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், 24 மணி நேரமும் தங்கி மருத்துவ பரிசோதனை செய்திட மருத்துவர் ஒருவர் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முருகேசன் உள்பட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி