ஆப்நகரம்

முன்னாள் அமைச்சர் அத்து மீறல்?; பிடிஓவிடம் திமுக கூட்டணி புகார்!

கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அதிகாலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அனுமதி கொடுத்த கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மனு அளித்தனர்.

Samayam Tamil 25 Aug 2021, 8:01 am
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஏராளமான அதிமுக தொண்டர்களுடன், யூனியன் அலுவலகம் சென்ற முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் அலுவலகத்தை திறந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
Samayam Tamil கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்


இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுக ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் கோட்டாட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அதிமுகவினர் பயன்படுத்தியது சட்ட விரோதமானது. வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

மருத்துவர் ராமதாஸ் நீண்ட நாள் ஆசை; பாமக எம்எல்ஏ கன்னிப்பேச்சில் தகவல்!

அதிமுக கட்சி கூட்டம் அடிக்கடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று அரசு அலுவலகத்தை சட்ட விரோதமாக, சொந்த வேலைக்கு பயன்படுத்தி வரும் அதிமுக மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டு இருந்தது.

அடுத்த செய்தி