ஆப்நகரம்

ஈரோடு வ.உ.சி மார்க்கெட்: தக்காளி விலை குறைவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Jun 2022, 3:38 pm

ஹைலைட்ஸ்:

  • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைவு
  • கிலோ ரூ. 25 க்கு விற்பனை
  • சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தக்காளி விலை குறைவு
ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வரத்தாகி வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரத்தாகி வந்தது. இந்நிலையில் சமீப காலமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மை உடன் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45 க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50- க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

ஈரோடு மீன் மார்க்கெட் நிலவரம்: தாறுமாறாக குறைந்த மீன்களின் விலை..

இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி வரத்தானது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ 25- க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி