ஆப்நகரம்

சசிகலா பற்றி ஓபிஎஸ் பேசலாம், நான் சொல்லமாட்டேன்: முன்னாள் அமைச்சர் சைலன்ட்!

சசிகலா பற்றி ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து, நான் எந்த கருத்தையும் வெளியிட தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Oct 2021, 9:34 am
பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே தமிழ்நாடு அரசை புகழ்ந்து பேசுவதாக, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை, எந்த காலத்திலும் நான், எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் செய்த சாதனைகளை பற்றி மட்டுமே பேசி உள்ளேனே தவிர, அவர்கள் சொன்னது போன்று இல்லை. இவர்கள் வேண்டும் ஆனால் இடத்திற்கு தகுந்தால் போல் மாறலாமே தவிர எங்களிடம் அந்த நிலை இல்லை” என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil சசிகலா பற்றி ஒபிஎஸ் கூறலாம், நான் சொல்லமாட்டேன் முன்னாள் அமைச்சர்!


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோயிலில் உள்ள சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி செய்யும் இடத்திறிக்கு அருகே நிழற்குடை அமைப்பதற்கான சட்டமன்ற நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்ய வந்த போது படகு சவாரி செய்தார். பின்னர் கேஏ செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே தமிழ்நாடு அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், என்னை பற்றி கூறிய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

ருசியோ ருசி... நீங்கள் சாப்பிடும் மீன் எங்கு பிடிக்கப்படுகிறது தெரியுமா?
நான் பேசிய கருத்துகளே வேறு. யாரையும் நான் புகழ்ந்து பேசவில்லை. அவருக்கு தெரிந்தால் படித்து தெரிந்து கொள்ளட்டும்.

எந்த காலத்திலும் நான், எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் செய்த சாதனைகளை பற்றி மட்டுமே பேசி உள்ளேனே தவிர இவர்கள் சொன்னது போன்று இல்லை. அவர்கள்(கம்யூனிஸ்ட்) வேண்டுமானல் இடத்திற்கு தகுந்தால் போல் மாறலாமே தவிர எங்களிடம் அந்த நிலை இல்லை.

சசிகலா குறித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து, நான் எந்த கருத்தையும் வெளியிட தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி