ஆப்நகரம்

பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரா பிரபல ரவுடி சோட்டா ராஜன்?

மும்பையின் பிரபல ரவுடியாக இருந்த சோட்டா ராஜன், பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 10 Oct 2019, 5:50 pm
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 21- ஆம் தேதி (அக்டோபர் 21) தேர்தல் நடைபெறவுள்ளது.
Samayam Tamil mwc


இத்தேர்தல் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட, பிரபல ரவுடியான சோட்டா ராஜனின் சகோதரனான தீபக் நிகல்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு மகாராஷ்டிரத்தில் உள்ள பால்தன் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார்.

பாஜக - சிவசேனா கூட்டணியின் இந்த முடிவை வைத்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அப்புகைப்படத்தில் சோட்டா ராஜன் பிரதமர் நரேந்திர மோடியின் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொள்ளவது போன்றும், பின்னால், மகாராஷ்டிர முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ் நிற்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளன.

மேலும், இப்புகைப்பட காட்சியை குறிப்பிட்டு, எதிர்வரும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடியின் பழைய ஏழை நண்பரான சோட்டா ராஜனின் சகோதரருக்கு எம்எல்ஏவாக போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதமர் மோடி, தமது தயாள குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். சோட்டா ராஜனுக்கும், அவருக்கும் இடையேயான நட்பு கிருஷ்ணருக்கும், சுதாமாவுக்கு இடையேயான நட்பை போன்றது எனவும் அந்த பதிவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த வயசுலயும் உற்சாக நடனமாடும் மூதாட்டி...பிரதமரின் தாயாரா?

தேவேந்தர் வடிரா என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இப்புகைப்படத்தின் நம்பத்தன்மை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதில், இப்புகைப்படம் உண்மையில் 1993-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தெரிய வந்தது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து 2014 செப்டம்பர் 26 -ஆம் தேதி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இடம்பெற்றுள்ள செய்தியில் இப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டள்ளது.

1993இல் அமெரிக்காவுக்கு சென்ற நரேந்திர மோடியை, நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில், சுரேஷ் ஜெயின் என்பவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பது தான் அந்த உண்மையான புகைப்படம்.
அந்தப் புகைப்படத்தில் தற்போது, சோட்டா ராஜனின் புகைப்படத்தையும் சேர்த்து, புனையப்பட்ட ஃபோட்டோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

காந்தி பிறந்த நாளில் வைரலான புகைப்படம் உண்மைதானா?

இதன் மூலம், மோடியின் பழைய புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, அவர் சோட்டா ராஜனுடன் இருப்பது போன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது டைம்ஸ் குழுவின் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது நவி மும்பை பகுதியில் உள்ள தலோஜ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி