ஆப்நகரம்

மோடி அளிக்கவிருந்த விருதை புறக்கணித்தாரா ரூபா ஐபிஎஸ்?

கர்நாடகா டிஐஜி ரூபா மோட்கில் மோடி அரசு அளிக்கவிருந்த விருதை மறுத்ததாக ஒரு பேஸ்புக் இந்தி பதிவு வைரலாகி வருகிறது. இதனை உண்மை என்று நம்பிய பல நெட்டிசன்கள், ’ஆஹா! ரூபா அவர்களுக்கு என்ன ஒரு தன்மானம்’ என பாராட்டித் தள்ளினர். ஆனால் இது முற்றிலும் தவறானது.

Samayam Tamil 4 Jun 2019, 7:06 pm
கர்நாடகா டிஐஜி ரூபா மோட்கில் மோடி அரசு அளிக்கவிருந்த விருதை மறுத்ததாக ஒரு பேஸ்புக் இந்தி பதிவு வைரலாகி வருகிறது. இதனை உண்மை என்று நம்பிய பல நெட்டிசன்கள், ’ஆஹா! ரூபா அவர்களுக்கு என்ன ஒரு தன்மானம்’ என பாராட்டித் தள்ளினர். ஆனால் இது முற்றிலும் தவறானது.
Samayam Tamil Capture

ரூபா எந்த விருதையும் புறக்கணிக்கவோ, வாங்க மறுக்கவோ இல்லை. பாஜக எதிர்ப்பாளர்கள் சிலர் இதனைத் திட்டமிட்டு வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா பேக்ட் செக் குழு தெரியப்படுத்தியது.

’முன்னதாக தீவிரவாதிகளால் மும்பை துப்பாக்கிச் சூட்டில் பிரபல காவல் அதிகாரி ஹேமந்த் காகரே கொல்லப்பட்டார். அவரை பாரதிய ஜனதா எம்பி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். இதனால் என்னால் பாஜக அரசு அளிக்கும் இந்த விருதை ஏற்க முடியாது’ என ரூபாவே சொல்வதுபோல ஹிந்தியில் அந்த பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது ’அந்த போலி செய்தியில் பகிர்ந்திருப்பது போன்று ஒரு விருதே கிடையாது. நான் ஏற்கனவே ஜனாதிபதியிடம் சாதனை மெடல் பெற்றுள்ளேன். இச்செய்தியை என் நலன்விரும்பிகள் நம்பவேண்டாம்’ என ரூபா தன் அதிகாரப் பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி