ஆப்நகரம்

பிலிப்பைன்ஸ் அதிபர் வருகைக்காக இந்தியவில் விடுமுறை?

பிலிபைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி வருகையை முன்னிட்டு இந்தியாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது என இணையத்தில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 7 Feb 2019, 4:22 pm
பிலிபைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி வருகையை முன்னிட்டு இந்தியாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகனாக நாம் பெருமை அடைவோம் என கேப்ஷன் பதிவிடப்பட்டு பிலிப்பைன்ஸ் அதிபர் டியூடர்டி கருப்பு நிற காரில் ஒருந்து இறங்கும் புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி டியூட்டர்டியை வரவேற்கிறார். இந்த பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது.
Samayam Tamil Capture


உண்மை என்ன?


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று பல்வேறு நாட்டு அதிபர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக டில்லிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். டியூடர்டியும் குடியரசு தினத்தில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார். இந்த புகைப்படத்தை வைத்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர் சில இணைய வாசிகள். டியூடர்டி வருகைக்காக விடுமுறை அளிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி