ஆப்நகரம்

FACT CHECK: திமுக மாறனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்?

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, மறைந்த திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 4 Dec 2020, 5:34 pm
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ஆம் தேதி தேதி அறிவிக்கப்படும் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரஜினிகாந்த், அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார்.
Samayam Tamil ரஜினியுடன் அர்ஜுன மூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுன மூர்த்தி


தொடர்ந்து, தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி தன்னுடைய பதவியை ராஜினிமா செய்வதாக கட்சிக்கு கடிதம் அனுப்பினார். அர்ஜுன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழக பாஜக அறிவித்தது. இதையடுத்து, அர்ஜுன மூர்த்தி யார் என்பது குறித்த செய்திகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

பரவும் செய்தி

இந்த நிலையில், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய உறவினருமான முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். அவரது மறைவிற்கு பின் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் என்ற தகவல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. முன்னணி ஊடகங்களும் இந்த தகவலை பதிவிட்டுள்ளனர். இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பலரும் பகிர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த தகவல் போலியானது என தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு மற்றும் வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலை முரசொலி மாறனின் மகனும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் ரஜினிகாந்தால் துவங்கப்படவுள்ள அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டு அர்ஜுன மூர்த்தி எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல், அதுபோன்று எவரும் எனது தந்தையின் அரசியல் ஆலோசகராக இருந்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன் அறிக்கை


மேலும், முரசொலி மாறன் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பை அர்ஜுன மூர்த்தி வைத்திருந்ததாகவும், அவர் திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

FACT CHECK: திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர்!

முடிவுஎனவே, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அர்ஜுன மூர்த்தி மறைந்த திமுக மூத்த தலைவர் முரசொலி மாறானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி