ஆப்நகரம்

பெரம்பலூரில் டைனோசர்கள் வாழ்ந்ததா; கிடைச்சது டைனோசர் முட்டைகளா - உண்மை என்ன?

குன்னம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது உண்மையில் டைனோசர் முட்டைகள் தானா என்பதை இங்கே ஆராயலாம்.

Samayam Tamil 28 Oct 2020, 11:11 am
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழும் உலகில் டைனோசர்கள் வாழ்ந்து மறைந்துள்ளன. இவற்றின் எச்சங்கள் புதை படிமங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் வெங்கட்டான் குளத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அப்போது பல்வேறு அளவுகளில் உருண்டை வடிவிலான டைனோசர் முட்டைகள் போன்று உருவங்கள் கிடைத்தன.
Samayam Tamil Dinosaur Eggs in Perambalur


இவை 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் படிமங்கள் என்று தகவல்கள் பரவின. இந்த முட்டைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உண்மை என்ன?

இவை அம்மோனைட் படிமங்கள் என்று புவியியல் மற்றும் அகழாய்வு ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

கிடைத்த ஆதாரங்கள்

புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், அவை அனைத்தும் concretions, படிமப்பாறைகள் உருவாகுன் பொழுது ஒரு இடத்தில் ஒரு சிறிய தொல்லுயிர் எச்சமே, அல்லது ஒரு சிறு பொருள் இருந்தால் அதை சுற்றி தாதுக்கள் சேரும், mineral precipitate ஆகும்.

FACT CHECK: இளம் பெண் அருகில் உள்ளாடையுடன் நிற்பது திருமாவளவனா?

சிறு சிறு லேயர்களாக சேர்ந்து முட்டை வடிவில் இருக்கும். இவை முட்டைகளில்லை. கலிபோர்னியாவில் bowling balls beach என ஒரு பீச்சில் ஏகப்பட்ட உருளைகள் கொட்டி கிடக்கும். ஏன் இதே குன்னம், காரை பகுதிகளில் phosphatic nodules உருண்டையாக கொட்டிக்கிடக்கும் utattur potatos என அதை அழைப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முடிவு

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகள் அல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி