ஆப்நகரம்

பிரெஞ்ச் மக்களை கொன்று குவிக்க முஸ்லிம்களுக்கு உரிமையா; மகாதீர் போட்ட ட்வீட் உண்மையா?

முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் பதிவிட்ட ட்வீட் குறித்த உண்மைத் தன்மையை இங்கே காணலாம்.

Samayam Tamil 31 Oct 2020, 11:44 am
பிரான்ஸ் நாட்டில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரம் காட்டப்பட்ட விவகாரம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். அதன்பிறகு சர்ச்சில் மூன்று பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சூழலில் முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில், “கோபம் கொள்வதற்கும், லட்சக்கணக்கான பிரான்ஸ் குடிமக்களை கொன்று குவிப்பதற்கும் முஸ்லிம்களுக்கு உரிமை இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil Mahathir Mohamad


மதிப்புமிக்க தலைவர், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தவர் இப்படியொரு அதிரவைக்கும் விஷயத்தை பொதுவெளியில் தெரிவிக்கலாமா? இது வன்முறைக்கு வழிவகுக்காதா? என்று கேள்வி எழுந்தது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் உண்மையில் மகாதீர் தான் இப்படி சர்ச்சைக்குரிய பதிவை இட்டாரா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இல்லை போலியான மகாதீர் முகமது கணக்கின் மூலம் பகிரப்பட்டு வருகிறதா என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

FACT CHECK: விபசார வழக்கில் கைது செய்யப்பட்டாரா குஷ்பு?


உண்மை என்ன?

ஆம். மகாதீர் முகமது தான் இப்படியொரு சர்ச்சைக்குரிய பதிவை இட்டுள்ளார். இதனையறிந்து ட்விட்டர் நிறுவனம், இந்தப் பதிவு எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டது. அதற்குள் சிலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவுகளை மகாதீர் முகமது இட்டிருந்தார்.

ஆதாரம்

மகாதீர் முகமது தான் இப்படியொரு சர்ச்சைக்குரிய பதிவை இட்டிருப்பதாக பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்களும் பதிவிட்டுள்ளன. அதில் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஊடகமும் ஒன்று. இதன்மூலம் மகாதீரின் ட்வீட் உண்மை தான் என்று தெரியவருகிறது.

TOI செய்தி: லிங்க் இதோ...

முடிவு

டைம்ஸ் பேக்ட் செக் மூலம் ஆராய்ந்ததில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதும், அதனை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருப்பதும் உண்மை தான் என்று நிரூபணமாகிறது.

அடுத்த செய்தி