ஆப்நகரம்

தலித் சமையல், எட்டி உதைத்த சாதி வெறியர்கள்... பீகார் வீடியோ உண்மையா?

பீகாரில் தலித் சமைத்த உணவு வேண்டாம் எனச் சாதி வெறிபிடித்த இருவர் உணவை எட்டி உதைக்கும் வீடியோ எனப் பகிரப்பட்டது உண்மையானதா என்பது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 23 May 2020, 4:18 am
அலெக்ஸ் அம்பேத்கர் என ட்விட்டர் கணக்கை வைத்திருக்கும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று நாட்டில் வைரலாக பரவியது.
Samayam Tamil தலித் சமையல், எட்டி உதைத்த சாதி வெறியர்கள்... பீகார் வீடியோ உண்மையா?
தலித் சமையல், எட்டி உதைத்த சாதி வெறியர்கள்... பீகார் வீடியோ உண்மையா?


விசாரணை குறித்து
அந்த வீடியோவில் பெண் ஒருவர் நிற்பதாகவும், இரண்டு இளைஞர்கள் அங்குச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை வேண்டாம் எனக் கால்களால் எட்டி உதைத்ததாகவும் இருந்தது. அந்த வீடியோவிற்கு கேப்சனாக, "பீகாரில் உள்ள 19 தனிமைப்படுத்தும் மையங்களில் வழங்கப்படும் உணவை தலித் சமைத்து வருகிறார்கள் என்பதால், அதை நோயாளிகள் கால்களால் எட்டி உதைக்கின்றனர்" என வழங்கப்பட்டிருந்தது.


குறிப்பிட்ட வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்தது. ட்விட்டர் மட்டுமன்றி பேஸ்புக்கிலும் இந்த தலித் வீடியோ தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

undefined
உண்மை
எனினும் உண்மை என்னவென்றால் இந்த வீடியோ குறித்து இணையத்தில் பரப்பப்பட்ட தகவல்கள் பொய் என்பதுதான். இந்த உண்மை டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது.

அந்த வீடியோவில் வரும் பள்ளியின் பெயரை வைத்து எங்கள் செய்திக் குழு விசாரணையைத் தொடங்கியது. அதன்படி வீடியோவில் படம்பிடிக்கப்பட்ட சம்பவம் பீகார் மாநிலம் மாதுபானி மாவட்டத்தில் உள்ள மாதவ்பூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

FAKE ALERT: Bihar video shared with false claim of Upper castes refusing food from Dalits

மேலும் இந்த வீடியோ தொடர்பாக இணையத்தில் ஆய்வு செய்தபோது, "புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் சமையல் பெண்ணை இழிவாகப் பேசி, உணவை எட்டி உதைத்து வீணாக்கினர்" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது.

உண்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள்
இதுகுறித்து மேலும் தகவல் சேகரித்தபோது, "சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பெண்ணை மனித இடைவெளியின்றி தங்களுக்குச் சோறு பரிமாறச் சொல்லி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த பெண் அதற்கு முன்வராத காரணத்தினால், உணவு மீது அந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது" என்பது தெரியவந்தது.

மேலும் அந்த வீடியோவில் உணவை எட்டி உதைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி அவர்கள் பெயர், பங்கஜ் குமார், மனோஜ் குமார், அஷோக் குமார் ஆகும். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இந்த விவகாரத்தில் தலித் எனக் குறிப்பிட எந்த காரணங்கலும் இல்லை" என்கின்றனர்.

தீர்ப்பு
இதன் மூலம் பீகார் மாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்திய தாக்குதல் வீடியோவை வைத்து சிலர் சாதி பிரச்சினையை தூண்டிவிட முயன்றுள்ளனர் என்பது தெரிகிறது.

அடுத்த செய்தி