ஆப்நகரம்

FAKE ALERT: ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாயை கொடூரமாக தாக்கியதா உ.பி. போலீஸ்?

ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தாயை உத்தரப் பிரதேச மாநில போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாக, சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 7 Oct 2020, 10:24 pm
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸில் அண்மையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் தற்போது வைரலாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil fact check


மலையாள மொழியில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், " கூட்டு பாலியல் வன்கொடுமையில் இறந்த இளம்பெண்ணின் உடலை உத்தரப் பிரதேச மாநில போலீசார் தகனம் செய்வதற்கு முன், தமது மகளின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்து கொள்கிறேன் என்று அந்த பெண்ணின் தாய் போலீசாரிடம் மன்றாடுவது போலவும், அப்போது அந்த பெண்ணை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளன. இதே வீடியோ காட்சி, ஆங்கில விளக்கத்துடன் ஒரு நபரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

அதனை கொண்டு, இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. கூகுள் இன்வீட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், குறிப்பிட்ட வீடியோ உத்தரப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டம், அம்பேத்கர் நகரில் ஆறு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது.

FAKE ALERT:Woman kicked by police in this video is not Hathras victim's mother

அம்பேத்கர் நகரில் ஒரு காய்கறி கடையை வைத்திருக்கும் பெண், பொதுமுடக்க காலத்தில் தடையை மீறி கடையை திறந்து, ரகசியமாக வியாபாரம் செய்து வந்ததாக போலீசார் குற்றம்சாட்டினர்.

அதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வலம் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான செய்தியும் எட்டு நாட்களுக்கு முன் ஹிந்தி இணைய இதழ்களிலும் வெளியாகியிருந்தன.

FACT CHECK: ஆச்சி மசாலா நிறுவனம் தமிழை சிறுமைப்படுத்தியதா?

எனவே, போலீசாரால் பெண் தாக்கப்படும் சம்பவம் ஹத்ராஸில் நிகழ்ந்ததல்ல. ஹமிர்பூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்றது என்பது உண்மைக் கண்டறியும் குழுவின் ஆய்வில் உறுதியாகிறது.

அடுத்த செய்தி