ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண பொங்கல் பண்டிகைக்கு மதுரை வருகிறாரா மோடி?!

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண, வரும் ஜனவரி மாதம் 11- ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, மதுரை அலங்காநல்லூருக்கு வருகை தர உள்ளார். அவருடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மதுரைக்கு வர உள்ளார் என சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் செய்தியின் நம்பத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 30 Oct 2019, 5:26 pm

பிரதமர் நரேந்திர மோடி, தமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மொழியை உலக அரங்கில் பெருமைப்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil nmvp


கடந்த மாதம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

அதைத்தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான, பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க சநதிப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்,, சமீபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து அசத்தினார்.

பாகிஸ்தானிடம் வெள்ளைக் கொடி காட்டியதா இந்திய ராணுவம்?!

இவற்றின் வரிசையில், பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக பிரசித்திப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார்.

அவருடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண இருக்கிறார் என நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் தகவலை தீயாக பரப்பி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் "கோ பேக் மோடி" என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வந்தாலும், மோடி எப்போதும் தமிழை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தான் இருக்கிறார் என தங்களது பதிவில் நெட்டிசன் பெருமை பொங்க கூறி வருகின்றனர்.

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, சில நாளிதழில்களிலும் இச்செய்திகளும் வெளியாகியுள்ளன.

தொழிலதிபர் அதானியின் மனைவியை சிரம் தாழ்த்தி வணங்கினாரா பிரதமர் மோடி?

இந்த நிலையில், "ஜல்லிக்கட்டை காண, பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மதுரைக்கு வருகை தர உள்ளனர் என்ற செய்தி முற்றிலும் தவறானது. பொய்யான இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம்" என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு, பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பிரதமரும், ரஷிய அதிபரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண மதுரைக்கு செல்வதற்கான எந்தத் திட்டமும் வகுக்கப்பட்வில்லை.
இதுகுறித்து பரப்பப்பட்டு வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்பதுடன், தவறானதும் கூட என" பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே, ஜல்லிக்கட்டு போட்டியுடன், பிரதமர் மோடியை இணைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகிறது.

அடுத்த செய்தி