ஆப்நகரம்

FACT CHECK: சென்னை ஐஐடி கணினிகளை சூறையாடிய வைரஸ்! டேட்டாக்கள் கேள்விக்குறி..?

சென்னை ஐஐடியில் உள்ள கணினிகளில் தீம்பொருள் தாக்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைதான் என நிரூபணம் ஆகியுள்ளது.

Samayam Tamil 27 Feb 2020, 9:25 pm
கடந்த 20 ஆம் தேதி சென்னை ஐஐடியில் உள்ள கணினி ஆய்வகத்தில் இருக்கும் அனைத்து கணினிகளையும் தீம்பொருள் என்று கூறப்படும் வைரஸ் (ransomware) தாக்கியுள்ளதாகவும், அதனால் உள் மின்னஞ்சல் சேவையும் முடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் ஐஐடி நிர்வாகம் அறிவித்ததில், '' சர்வர் கோளாறால் கணினிகளில் ஒரு சில உள் மின்னஞ்சல் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னை சரி செய்யப்படும். இதை தவிர வேறு எந்த சேவையிலும் பாதிப்பில்லை என கூறப்பட்டது.
Samayam Tamil சென்னை ஐஐடியில் உள்ள கணினிகளில் தீம்பொருள் தாக்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல்



ஆனால் கணினிகளை வைரஸ் தாக்கியதாக குறிப்பிடப்படவில்லை. இதில் பிரச்னை என்னவென்றால், ஒரு வேலை ransomware எனப்படும் தீம்பொருள் தங்கியிருந்தால் மாணவர்கள் இதுவரை சேமித்து வைத்திருந்த டேட்டாக்களை எளிதாக நீங்க வாய்ப்புள்ளது. ஆனால் வெறும் சர்வர் பிரச்னை என்றால் டேட்டாக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஊடகங்கள் வெளியிட்ட செய்தியையும், ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையையிலும் நம்பகத்தன்மையை ஆராயும் பணியை டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு மேற்கொண்டது.

FACT CHECK: IIT Madras servers were under ransomware attack?

உண்மை:

ஐஐடியில் இருக்கும் கணினி ஆய்வகத்தின் சர்வரை ransomware தாக்கியது உண்மைதான் என டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு, ஐஐடி தொடர்பான இரண்டு உள் மின்னஞ்சல்களை அணுகியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் ஐஐடி யின் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் துறையிலிருந்து மாணவர்களுக்கு மறைமுகமாக ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், '' டியர் ஸ்டூடெண்ட்ஸ், உங்களது அனைத்து கணினிகளையும் ரேண்ட்ஸம் வைரஸ் தாக்கியுள்ளது. ஆகையால் கணினியில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டாக்களை கையிருப்பு வைத்திருங்கள்.

ஏனெனில் கணினியில் உள்ள அனைத்தும் அழிந்துவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐஐடி நிர்வாகம் தந்து அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் வெறும் சர்வர் கோளாறு என்றுதான் குறிப்பிட்டுள்ளது. இந்த உண்மை தகவல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி