ஆப்நகரம்

ஒரே குடும்பத்தை குறி வைத்த கொரோனா; அதுக்குன்னு இத்தனை பேரா சாவுறது?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு மாதத்திற்குள்ளாகவே அதுவும் ஒரே குடும்பத்தில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர். இந்தச் சம்பவம் ஓசூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அருகில் உள்ள பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கிவிட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 20 May 2021, 11:42 am
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


கடந்த சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் மற்றும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் அக்கா, தங்கைகள் 3 பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தங்கைகள் இருவரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அக்காவும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து 3 பேர் பேரும் உயிரிழந்தனர். மூத்த அக்காவின் மகனான 38 வயதான தனியார் வங்கி மேலாளர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரும் பலியானார்.

ஒருநாள் போலீசாக மாறிய 2 இளைஞர்கள்; ஊரடங்கில் கெத்தா சுற்றியதற்காக பரிசு!

ஒரு மாதத்திற்குள்ளாகவே அதுவும் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அருகில் உள்ள பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கிவிட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி