ஆப்நகரம்

லஞ்சம் வழங்கியவர்களுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு... விவசாயிகளுக்கு அரசின் பதில் என்ன?

விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு திட்டத்தில் லஞ்சம் வழங்கியவர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கி, தகுதியானவர்களை அலைகழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 25 May 2022, 5:43 pm

ஹைலைட்ஸ்:

  • அஞ்செட்டி பகுதியில் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு திட்டம்
  • இலவச மின் இணைப்பு திட்டத்தில் லஞ்சம் வழங்கியவர்களுக்கு மட்டுமே இணைப்பு
  • தகுதியானவர்களை அலைகழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்
ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு திட்டத்தில் லஞ்சம் வழங்கியவர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கி, தகுதியானவர்களை அலைகழிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க 50000 ரூபாய் திட்டத்தில் பதிவு செய்த 15 விவசாயிகளுக்கு 1,30,710 ரூபாய் செலுத்தி மின் இணைப்பு பெற்றுக்கொள்ள மின்வாரியத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இதுக்குறித்து விவசாயிகள் கேட்டபொழுது தவறுதலான மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறி நோட்டீசை திரும்ப பெற்றுக்கொண்டு மறு மதிப்பீடு செய்வதாக கூறி தற்போது மின் இணைப்பு வழங்க மறுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் மின்பொறியாளர் அலுவலகத்திற்கு அஞ்செட்டி பகுதியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஏராளமானோர் வந்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுக்குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் கூறியதாவது: 50000 ரூபாய் மதிப்புடைய திட்டத்தில் 1,30,710 ரூபாயை குறிப்பிட்டதை தவறு என ஒப்புக்கொண்ட அதிகாரிகள், மறு மதிப்பீடு செய்யாமல் தற்போது மின் இணைப்பு வழங்க முடியாது என மறுக்கிறார்கள். லஞ்சம் கொடுப்போருக்கு மதிப்பீடு சரியாக செய்து, மின் இணைப்புகளை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

'கண்டேன் காதலை' படம் சந்தானம் பாணியில் நலத்திட்ட உதவிகள்... கடுப்பான விவசாயிகள்..!

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க 48 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து காத்திருந்தபோதும் எங்களை சந்திக்க மறுக்கிறார்கள். அதிகாரிகள் அலுவலகங்களில் இருப்பதில்லை. எனவே தமிழக அரசு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதியுடைய விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.‌
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி