ஆப்நகரம்

வரும் 11ஆம் தேதி வரை டோல்கேட் கட்டணம் ரத்து..!

வரும் 11-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

TNN 9 Nov 2016, 5:28 pm
வரும் 11-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
Samayam Tamil  toll charges cancelled temporarily till november 11
வரும் 11ஆம் தேதி வரை டோல்கேட் கட்டணம் ரத்து..!


இந்தியாவில் இன்று முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்கள் இன்று செயல்படாது என்பதால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.அவசர தேவைக்கு கூட இந்த நோட்டுகளை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இந்த நோட்டுகளை வாங்க மறுத்தனர்.மேலும் கட்டணம் செலுத்தாத வாகனங்களை விடவும் அவர்கள் மறுத்தனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளிலும் பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால்,கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்தது.இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ,வரும் நவம்பர் 11-ஆம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Toll charges cancelled temporarily till november 11

அடுத்த செய்தி