ஆப்நகரம்

10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு - எனினும் வெளியே போகலாம்!

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது

Samayam Tamil 11 May 2021, 5:12 pm

ஹைலைட்ஸ்:

  • அதிகரிக்கும் கொரோனா பரவல் - தெலங்கானாவில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு
  • காலை 6 மணி - காலை 10 மணி வரை அனைத்து பணிகளையும் செய்ய அனுமதி
  • தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil curfew
ஊரடங்கு
தெலங்கானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல், அடுத்த பத்து நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, முன்னெப்போதும் இல்லாத வகையில், வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்த, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு பாக்காதீங்க! - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இந்த கூட்டத்தில், நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்கு, மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், காலை 6 மணி முதல், காலை 10 மணி வரை, அனைத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள, தென்னிந்திய மாநிலங்கள் வரிசையில், தெலங்கானா மாநிலமும் இணைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மட்டும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி