ஆப்நகரம்

இது என்ன ஆம்புலன்ஸா? இல்லை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனமா?

இது என்ன ஆம்புலன்ஸா? இல்லை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனமா?

Samayam Tamil 28 Apr 2018, 5:18 am
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனமாக மாறி வருகிறது.
Samayam Tamil ambulance


பொதுவாக விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட்டவரை காப்பாற்ற முதலில் வருவது ஆம்புலன்ஸ் மட்டும் தான். அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையையே இங்க பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனமாக மாற்றியுள்ளனர். மேலும், ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்வதும் இந்த 108 ஆம்புலன்ஸ் தான்.

ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல், உத்தரப்பிரதேச மாநிலம் கன்னொஜ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மருத்துவமனைக்கு பயன்படுத்தும் பொருட்களை ஏற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சிலர், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க்கது.

அடுத்த செய்தி