ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்!!

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.

Samayam Tamil 25 May 2020, 8:21 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம், பிறகு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 வரை அமலில் உள்ளது.
Samayam Tamil public exam kerala


தொடர் பொதுமுடக்கத்தின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பள்ளி பொதுத் தேர்வுகளையும், கல்லூரி ஆண்டு இறுதி தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டபோதும், அந்தந்த மாநில அரசுகள் தங்ளது மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவின் தாக்கத்தை பொருத்து பல்வேறு பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

காதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திருமணம்..!

தங்களது மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கொரோனா வைரசின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை, இரண்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நாளை (மே 26) முதல் தொடங்க கேரள மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த கேரள மாநில உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"கொரோனா பரவல் தடுப்புக்கு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி

நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள், பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்புகளையடுத்து, ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி