ஆப்நகரம்

பத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3!

நாட்டில் 71வது குடியரசு தினத்தில் பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Jan 2020, 9:10 pm
நாட்டில் 71வது குடியரசு தினத்தில் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் இடம்பிடித்துள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 118 நபர்களுக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.
Samayam Tamil 118 padma shri 7 padma vibhushan 16 padma bhushan award 2020 one from tamil nadu
பத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3!


எஸ். ராமகிருஷ்ணன் சமூக சேவகர். இவரால் சுமார் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராமகிருஷ்ணன் 4 தலைமுறையாக இந்த சேவையை சுமார் 800 மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று மேற்கொண்டுள்ளார்.


இவர் உருவாக்கியுள்ள மறுவாழ்வு மையங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவைப்படும் மருந்து, கல்வி, திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

வீரதிரச் செயலுக்கான விருதுகள் அறிவிப்பு... விருதுகளை அள்ளியிருக்கும் ஜம்மு காஷ்மீர் ‘மாநிலம்’...

ராமகிருஷ்ணன் 20 வயதாக இருந்தபோது, விபத்து ஒன்றில் சிக்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். ராமகிருஷ்ணனின் கழுத்திற்குக் கீழ் உள்ள உறுப்புகள் செயலற்றே காணப்படுகிறது. இப்போது அவருக்கு வயது 65. இவர் உள்பட மொத்தம் 118பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம விபூஷன் விருதை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, மறைந்த சாமியார் ஒருவர், பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் உள்பட 7 பேருக்கு வழங்கப்படுகிறது.

குடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!

பத்ம பூஷன் விருது 16 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் பெறுகிறார்கள். சமூக சேவகருக்கான பத்ம பூஷன் விருதை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெறுகிறார். அதே வேளையில், ஏற்றுமதி தொழிற்துறை சார்ந்து பதம் பூஷன் விருதை வேனு ஸ்ரீனிவாசன் பெறுகிறார். தெலங்கானாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பி. வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி