ஆப்நகரம்

ராஜஸ்தான்: தசரா பண்டிகையின் போது 12 பேர் ஆற்றில் மூழ்கி பலி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் தசரா பண்டிகையின் முடிவில் துர்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற 12 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 9 Oct 2019, 2:00 pm
நாடு முழுவதும் நேற்று தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. வடமாநிலத்தில் ராம்லீலா மைதானத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்டிகை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
Samayam Tamil 1



அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் இந்துக்கள் போற்றி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் கடைசி நாளான நேற்று துர்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைப்பது வழக்கம்.

ராஜஸ்தான் மாநிலம் பார்வதி நதியில் ஆயிரக்கணக்கானோர் சங்கமித்து சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் எதிர்பாராதவிதமாக 10 பக்தர்கள் அடித்து சென்றனர். அவர்களை காப்பாற்ற சக பக்தர்கள் முயற்சித்தும் முடியாமல் போயிற்று.

இந்நிலையில் சம்பவம் அறிந்து விரைந்த தீ அணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து சென்ற 10 பேரின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் இதேபோல மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாஜகான் நதியில் சிலையை கரைக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த நவராத்திரி பண்டிகை கடந்த 8 நாட்களாக அப்பகுதி இந்துக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வந்தது. எனினும் கடைசி நாளான நேற்று 12 பக்தர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தினால் அவர்கள் குடும்பம் சோகத்தில் முடங்கியுள்ளது.

அடுத்த செய்தி