ஆப்நகரம்

ஃபாரீன் ரிட்டனா? -அப்போ இனிமே 14 நாள் குவாரன்டைன் கன்ஃபார்ம்!!

பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோர் இனி 14 நாட்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2020, 8:56 pm
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..
Samayam Tamil quarantine


இருப்பினும் சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கும், வந்தே பாரதம் திட்டத்தின்கீழ் தாயகம் திரும்ப விரும்புவோருக்காகவும் பல்வேறு நாடுகளுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோருக்கான கொரோனா தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு இப்போதைக்கு விமான சேவை இல்லை.... மத்திய அரசு ஸ்ட்ரிக்ட்!!

அதன்படி, பயணிகள் தங்களது பயண தேதிக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்னர், அதுதொடர்பான சுயஒப்புதல் விண்ணப்பத்தை www.newdelhiairport.in என்ற இணையதள பக்கத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து பயணிகளும் ஆரோக்யசேது செயலியை தங்களது ஸ்மார்ட்ஃபோனில் கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விமானப் பயணிகள் இந்தியா வந்தடைந்ததும் அவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதில், முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலும், அடுத்த 7 நாட்கள் தங்களது வீடுகளிலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது கட்டாயம்.

கொரோனா தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால் இது இருக்கு என்று அர்த்தமாம்-ஆய்வில் தகவல்!

அதேசமயம், கர்ப்பணம், உடல்நலக்குறைவு, வீட்டில் முதியவர்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் 14 நாட்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

இந்த நிபந்தனைகள் எல்லாம் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

விமானப் பயணிகளை போன்று, கப்பல் பயணிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி