ஆப்நகரம்

14 குரங்குகள் மொத்தமாக உயிரிழப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சத்தீஸ்கரில் உள்ள வனப்பகுதியில் 14 குரங்குகள் மொத்தமாக உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

TOI Contributor 28 Oct 2017, 12:49 pm
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள சீதாநதி வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான விலங்குள் பறவைகள் உள்ளன.
Samayam Tamil 14 monkey troop poisoned to death
14 குரங்குகள் மொத்தமாக உயிரிழப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை

இந்த பகுதிக்கு செல்லும் சாலையில், இன்று காலை சுமார் 14 குரங்குகள் மொத்தமாக உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்,குரங்குளை பரிசோதனை செய்ததில், அவைகள் அனைத்தும் விஷ உணவை சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குரங்குகள் மொத்தமாக இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாகவும், அவற்றை ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லும் போது பாதி குரங்குகள் மட்டுமே இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், உயிருக்கு போராடும் சில குரங்குகளுக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தார்

அடுத்த செய்தி