ஆப்நகரம்

புலிகள் சரணாலயத்தில் புகுந்த 16 அடி ராஜநாகம்: பாதுகாப்பாக மீட்ட வனத்துறை (வீடியோ)

சிமிலிபால் புலிகள் சரணாலத்தில் புகுந்த 16 அடி ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

TNN 9 Nov 2016, 9:34 pm
ஒடிசா: சிமிலிபால் புலிகள் சரணாலத்தில் புகுந்த 16 அடி ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
Samayam Tamil 16 foot long king cobra captured in similipal tiger reserve in mayurbhanj
புலிகள் சரணாலயத்தில் புகுந்த 16 அடி ராஜநாகம்: பாதுகாப்பாக மீட்ட வனத்துறை (வீடியோ)


ஒடிசா மாநில சிமிலிபாலில் புலிகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று இன்று மாலை புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தால் புலிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

#WATCH: 16-foot-long King Cobra captured in Similipal Tiger Reserve in Mayurbhanj (Odisha). pic.twitter.com/JDWPd7egtU— ANI (@ANI_news) November 9, 2016 தகவலறிந்து வந்த வனத்துறையினர், ராஜநாகம் இருக்கும் இடத்தை நோட்டமிட்டனர். பின்னர் சிறிதும் பயமின்றி, நெருங்கி சென்று பாம்பின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு சென்றனர். இதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. பிடிபட்ட பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

16-foot-long King Cobra captured in Similipal Tiger Reserve in Mayurbhanj (Odisha).

அடுத்த செய்தி