ஆப்நகரம்

ராணுவ வீரர்கள் தற்கொலையில் உலகில் முதலிடம் பிடித்த இந்தியா.!

ஒவ்வொரு வருடமும், சாலை விபத்து மற்றும் தற்கொலை காரணமாக 1600 இந்திய ராணுவ வீர்ரகள் உயிரிழப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 3 Dec 2017, 12:09 pm
ஒவ்வொரு வருடமும், சாலை விபத்து மற்றும் தற்கொலை காரணமாக 1600 இந்திய ராணுவ வீர்ரகள் உயிரிழப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 1600 army man were died every year in indian army
ராணுவ வீரர்கள் தற்கொலையில் உலகில் முதலிடம் பிடித்த இந்தியா.!


ஒவ்வொரு வருடமும், சாலை விபத்து மற்றும் தற்கொலை காரணமாக அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் நேரிடும் உயிரிழப்பைவிட இது அதிகமாக உள்ளது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 6,500 பேரை இழந்து உள்ளது.

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் ராணுவத்தில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.


இறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது. அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள். விபத்துக்கள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.


இந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது.

உடல் ரீதியாக ஏற்படும் காயங்களால் கடந்த உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. அது போர்க் காலங்களில் ஏற்படும் உயிரிழப்பைவிட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1480 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இது குறித்து ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசுகையில் இதுபோன்ற உடல் காயங்களால் வருடந்தோறும் 700 முதல் 800 வீரர்களை நாம் இழந்து வருகிறோம் என வருத்தம் தெரிவித்தார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும், இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி