ஆப்நகரம்

பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 17 குழந்தைகள் படுகாயம்

பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

TNN 26 Nov 2016, 4:26 pm
சட்டர்பூர்: பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil 17 children injured as school bus overturns in mp
பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 17 குழந்தைகள் படுகாயம்


மத்திய பிரதேச மாநிலம் சட்டர்பூர் அருகே உள்ள லவ்குஷ் நகரில் கிரிஸ்ட் ஜோதி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் அப்பள்ளி வாகனம் ஒன்று, இன்று காலை சந்த்லாவில் இருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் முந்தேரி என்ற பகுதிக்கு அருகே வாகனம் கடந்த போது, திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்தது.

இதையடுத்து பள்ளி வாகனத்தை ஓட்டுநர் உடனடியாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 17க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், குழந்தைகளை மீட்டு, அருகிலுள்ள சட்டர்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Seventeen children were injured, six of them seriously, when their school bus overturned near Muderi village in the district on Saturday, police said.

அடுத்த செய்தி