ஆப்நகரம்

கடத்தல் கும்பலிடமே 15 கிலோ தங்கம் கடத்திய ராணுவ மற்றும் போலீஸ் அதிகரிகள் கைது!

மேற்கு வங்கத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து 15 கிலோ தங்கத்தை கைப்பற்றிவிட்டு அவர்களை விடுவித்த 2 ராணுவ அதிகாரி மற்றும் 3 காவல்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 9:09 pm
மேற்கு வங்கத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து 15 கிலோ தங்கத்தை கைப்பற்றிவிட்டு அவர்களை விடுவித்த 2 ராணுவ அதிகாரி மற்றும் 3 காவல்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
Samayam Tamil jail-generic_650x400_61517932452


மேற்கு வங்க மாநிலம் அலிபூர்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசிமாரா பகுதியானது, இந்தியா பூடான் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் போலீசார் மற்றும் ராணுவம் தினமும் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினட் கர்னல் பவான் பிரமா, உளவு பிரிவு அதிகாரி ஜவான் தஷ்ரத் சிங், காவல்துறை அதிகாரிகள் சத்யந்த்ரா நாத், கமலேந்திரா நாராயண், அனுருத்ரா ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில்,15 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடத்தல் கும்பலிடம், 15 கிலோ தங்கத்தை எங்களிடம் கொடுத்து விட்டால், விட்டு விடுவோம் என்றும், இல்லையென்றால் வழக்கப்பதிவு செய்து கைது செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த கடத்தல்காரர்கள், தங்கத்தை கொடுத்துவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் மெல்ல வெளிய தெரியவர, அம்மாநில ஐஜி அன்ந்த்குமாரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகறை சிபிஐ போலீசார் கைது செய்தனர். அவர்களிடம இருந்து 15 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி