ஆப்நகரம்

குஜராத் காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜக-வில் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள்

குஜராத் காங்கிரஸில் இருந்து வெளியேறிய இரண்டு எம்.எல்.ஏ-க்கள், பாஜக-வில் இணைந்திருபப்து அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 9 Mar 2019, 3:54 pm
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய நிலையில், அவர்கள் இருவரும் பாஜக-வில் இணைந்துள்ளனர். இதனால் அம்மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
Samayam Tamil குஜராத் காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த எம்.எல்.ஏ-க்கள்


காந்திநகரில், மாநில காங்கிரஸார் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கருத்து மோதலில் அதிருப்தி தெரிவித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவஹர் சவ்தா மற்றும் பிரஷோட்டம் சபாரியா, காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, ஜவஹர் சவ்தா தற்போது பாஜக-வில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் 30 வருடமாக இருந்தேன். தற்போது அதிலிருந்து வெளியேறிவிட்டேன். தொகுதிக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு பாஜக-வில் இணைந்துவிட்டேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. அதனால் பாஜகவில் இணைந்து சரியாக முடிவாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபாணி தலைமையில் இயங்கும் அரசில் விரைவில் ஜவஹர் சவ்தாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. மேலும், வரக்கூடிய மக்களவை தேர்தலில் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை முன்வைத்து தான் கட்சியிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாக குஜார்த்தின் மூத்த காங்கிரஸார் சிலர் கருத்து கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், குஜராத் எம்.எல்.ஏ-க்கள் இருவரும் தங்களது பதவி விலகல் கடித்தத்தை சபாநாயகரிடம் சமர்ப்பத்தினர். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது தொடர்பான மேலும் நடவடிக்கைகளுக்கு குஜராத் சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் காங்கிரஸை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர், பாஜக-வில் இணைந்தனர். அதை தொடர்ந்து ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் காங்கிரஸின் எண்ணிக்கை குறைந்தது.

மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற பல சம்பவங்களில் காங்கிரஸில் இருந்து 14 எம்.எல்.ஏ-க்களில் 13 பேர் பிரிந்து பாஜக-வில் இணைந்தனர். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த திண்டாட்டம், அக்கட்சியினரிடயே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி