ஆப்நகரம்

விவசாயிகள் இறந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும், என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Jan 2019, 10:43 am
மேற்கு வங்கத்தில் விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும், என்று அம்மாநில முதல்வர்மம்தா பானர்ஜிஅறிவித்துள்ளார்.
Samayam Tamil download (2)


மேற்கு வங்க மாநிலத்தைமுதல்வர்மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.தற்போது ’கிரிஷ் கிரிஷாக் பந்து’ திட்டத்தின் கீழ் விசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர்மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது மேற்கு வங்கத்தில், 72 லட்சம் விவசாய குடும்பங்கள்உள்ளன. அந்த குடும்பங்களை பாதுகாக்கநடவடிக்கை எடுத்துவருகிறோம்.விவசாயிகள்இறந்தால், அவர்களது குடும்பங்களுக்கு தலா , 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை1 ஏக்கருக்கு, தலா 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி