ஆப்நகரம்

டெல்லியில் 2 வயது குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொடூரம்!

டெல்லியில் 2 வயது குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 12:07 pm
டெல்லியில் பெற்றொருடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil டெல்லியில் 2 வயது குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொடூரம்!
டெல்லியில் 2 வயது குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொடூரம்!


தலைநகர் டெல்லியின், கோத்வாலி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஏழை ரிக்‌ஷா ஓட்டுநரும், அவரது மனைவியும்(குப்பை பொறுக்குபவர்) தங்களது 2 வயது குழந்தையுடன் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு அந்த வழியாக வந்த நபர் ஒருவர், பெற்றொருக்கு தெரியாமல் குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, ரத்தக் காயங்களுடன் தண்டவாளத்தில் போட்டு சென்றுள்ளான்.

இந்நிலையில் இரவு 2.30 மணியளவில் பெற்றொர் முழித்தப் பார்த்தபோது, குழந்தை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அனைத்து பகுதிகளிலும் குழந்தையை தீவிரமாக தேடினர். அந்தவழியாக சென்றவர்களிடம் குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தனர். ஆனால் எங்கும் தேடியும் குழந்தையை காணாததால் இறுதியாக கோத்வாலி போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் முயற்சியில் இறங்கினர். சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே கோத்வாலி மருத்துவமனையில் ஆதரவற்ற குழந்தை காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்றுபார்த்தபோது அது தங்கள் குழந்தைதான் என்பதை பெற்றொர் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து குழந்தை அறுவை சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளியை தீவிரமாக தேடிய போலீசார், இறுதியாக குருத்வாராவில் வைத்து அவனை கைது செய்தனர். இதுகுறித்து டிசிபி ஜஸ்மித் சிங் கூறுகையில், குற்றவாளி அணில்(24) ஏற்கெனவே கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளான்.

சம்பவத்தன்று இவன் மது அருந்திவிட்டு அந்தபகுதியில் நடந்து சென்றபோது குழந்தை பெற்றொருடன் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளான். பின்னர் குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து ரத்த காயங்களுடன் தண்டவாளத்தில் போட்டு சென்றுள்ளான் என்று கூறினார்.

அடுத்த செய்தி