ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் 2000 முஸ்லீம் மதராசா கல்வி மையங்கள் தீவிர கண்காணிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 2000 முஸ்லீம் மதராசா கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

TNN 22 Apr 2017, 1:41 pm
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 2000 முஸ்லீம் மதராசா கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 2000 madrassas mosques in up under security scanner
உத்தரப்பிரதேசத்தில் 2000 முஸ்லீம் மதராசா கல்வி மையங்கள் தீவிர கண்காணிப்பு


இந்திய அளவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் காஷ்மீரை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் நடவடிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தீவிரவாத சம்பவங்கள் தொடர்பாக, அடிக்கடி கைது செய்யப்படுவதும் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, முஸ்லீம் மக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லீம் மதக் கல்வியை போதிக்கும் மதராசா கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை கடும் கண்காணிப்புக்கு உள்படுத்தியுள்ளதாக, அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதராசாக்களில் நடத்தப்படும் கல்விப் பயிற்சிகள், மசூதிகளில் நடைபெறும் மத நிகழ்வுகள் என அனைத்திலும் பங்கேற்கும் மக்களின் நடவடிக்கை பற்றி விரிவான விவரங்களை சேகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிரவாதம் தலையெடுப்பதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்றும், மற்றபடி இஸ்லாமிய மக்களை துன்புறுத்த இல்லை என்றும், போலீசார் கூறியுள்ளனர்.

Senior police officers told TOI that "some 2,000 mosques and madrassas in Uttar Pradesh are now under a security scanner".

அடுத்த செய்தி