ஆப்நகரம்

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி

யமுனை நதியில் சென்றுகொண்டிருந்த படகு மூழ்கி 22 பேர் பலியான சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Sep 2017, 7:21 pm
யமுனை நதியில் சென்றுகொண்டிருந்த படகு மூழ்கி 22 பேர் பலியான சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 22 people drowned as boat capsizes in yamuna river
யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி


யமுனை கரையில் இருந்து ஹரியான செல்லும் படகு பாதி வழியில் மூங்கியது. இந்த படகில் 60 பயணிகள் பயணித்தனர் . இதில் அதிகமான பயணிகள் பெண்களே .

படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர். சரியான நேரத்தில் உதவிக் குழுவும் , காவல்துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டதால் மற்றவர்களை காப்பாற்ற முடிந்து.

விபதில் இறந்தவர்களின் குடும்பத்தினர் டெல்லி- ஷரன்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். படகில் அதிகமான பயணிகளை அழைத்துச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் 30 பேர் பயணிக்க வேண்டிய படகில் 60 பேர் பயணித்ததால் படகு கழ்ந்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தினர்.

இது குறித்து இறங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

22 people drowned as boat capsizes in yamuna river

அடுத்த செய்தி