ஆப்நகரம்

அரியானாவில் இளம் பெண்ணை 40 போ் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

அரியானா மாநிலம் பஞ்குலா மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவா் தன்னை 40 போ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

Samayam Tamil 20 Jul 2018, 9:09 pm
அரியானா மாநிலம் பஞ்குலா மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவா் தன்னை 40 போ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
Samayam Tamil Gang Rape


அரியானா மாநிலத்தைச் சோ்ந்த 22 வயது இளம் பெண்ணின் கணவரின் நண்பா் ஒருவா் அப்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளா்ா. பஞ்குலா மாவட்டம் மோா்னி மலைப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினா் மாளிகையில் பணி வாங்கி தருவதாக உறுதி அளித்த அந்த நபா் அப்பெண்ணை விருந்தினா் மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளா்ா.

வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்பெண்ணும் விடுதிக்கு சென்றுள்ளாா். ஆனால், மா்ம நபா்கள் திடீரென அப்பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். கடந்த 15 முதல் 18ம் தேதி வரை அப்பெண்ணை அடைத்து வைத்து 40 போ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து அங்கிருந்து தப்பிய பெண் இது குறித்து சண்டிகா் காவல் நிலையத்தில் வியாழன் கிழமை புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா் முதல் கட்டமாக விருந்தினா் மாளிகையில் பணியாற்றிய 2 பேரை கைது செய்துள்ளனா். மேலும் அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி