ஆப்நகரம்

தெலுங்கானாவில் 25 மான்கள் மர்ம சாவு

தெலுங்கானாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மக்காச்சோள பண்ணை அருகே விஷம் உட்கொண்ட 25 கலைமான்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

TNN 7 Aug 2016, 2:11 pm
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மக்காச்சோள பண்ணை அருகே விஷம் உட்கொண்ட 25 கலைமான்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 25 blackbucks poisoned in telangana
தெலுங்கானாவில் 25 மான்கள் மர்ம சாவு


தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் பகுதியில் அரசு நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கலைமான்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில் மக்காச்சோளத்தின் மீது பூச்சுக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு மேய்ச்சலுக்கு வந்த மான்கள் புற்களுடன் சேர்ந்து சிஷம் கலந்த பூச்சிக் கொல்லி மருந்தை தின்றதால் பரிதாபமாக பலியானதாக வனத்துறை அதிகாரி கங்கா ரெட்டி கூறியுள்ளார். கலைமான் ஆந்திர மாநிலத்தின் விலங்காக இருந்தது, தெலுங்கானவாக பிரிந்த பின்னர் சீதல் மான் தெலுங்கானா மாநில விலங்காக மாற்றப்பட்டது.

மான்களின் இறப்புக்கான உண்மை காரணம் கண்டறியப்படவில்லை. இறந்த மான்களின் உடலை பரிசோதனை செய்த பிறகு தான் மான்களின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி