ஆப்நகரம்

குடும்ப வறுமையை எண்ணி திருமணம் ஒத்திவைப்பு: பெண் துணிகர முடிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மானபாத், பீட், லாதூர் ஆகிய மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு கடன் சுமை பெருகி, பலரும் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்

TNN 24 Feb 2016, 12:55 pm
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மானபாத், பீட், லாதூர் ஆகிய மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு கடன் சுமை பெருகி, பலரும் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil 25 young girls decided to postpone the marriage due to drought
குடும்ப வறுமையை எண்ணி திருமணம் ஒத்திவைப்பு: பெண் துணிகர முடிவு


அப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் மருத்துவ செலவு, குழந்தைகள் படிப்பு, பெண் பிள்ளைகளின் திருமண வரதட்சணை என இக்கட்டான பண கஷ்டத்தில் வாடி வருகின்றனர்.

இதற்கிடையே, பீட் மாவட்டத்தின் வாருள் தண்டா கிராமத்தில் இருந்து பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த 25வயது இளம் பெண், தனது பெற்றோர்களின் பண நெருக்கடியை உணர்ந்து தனது திருமணத்தை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளார்.

இதனால் கஷ்டத்தில் வாடும் பெற்றோர்களின் துயரை சிறிதளவு துடைக்க முடியும் என்று எண்ணி அப்பெண் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், பண நெருக்கடி ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் வாழும் ஏராளமான விவசாயிகள் மகள்களின் திருமணத்தை நடத்த போராடி வருகின்றனர். அதற்காக வங்கிகளில் பெறும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தாங்காத மன உளைச்சலுக்கு ஆளாகி பலரும் தற்கொலை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பலரும் பிழைப்புத் தேடி அண்டை மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தின் போது மட்டுமே நாங்கள் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிகிறோம், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எங்களை மறந்துவிடுகிறார்கள் என விவசாயிகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி