ஆப்நகரம்

வலுவான சாட்சியத்திற்காக 7 வருடம் காத்திருந்தேன் – நீதிபதி ஷைனி

2ஜி ஊழல் வழக்கில் வலுவான சாட்சியங்களை யாரேனும் கொடுத்துவிட மாட்டாா்களா என்று கடந்த ஏழு வருடங்களாக காத்திருந்ததாக சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 21 Dec 2017, 5:32 pm
2ஜி ஊழல் வழக்கில் வலுவான சாட்சியங்களை யாரேனும் கொடுத்துவிட மாட்டாா்களா என்று கடந்த ஏழு வருடங்களாக காத்திருந்ததாக சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil 2g case religiously sat for 7 years but no evidence came says special cbi judge
வலுவான சாட்சியத்திற்காக 7 வருடம் காத்திருந்தேன் – நீதிபதி ஷைனி


மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக இன்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீா்ப்பு நகலில் நீதிபதி ஓ.பி. ஷைனி கூறியிருப்பதாவது, வழக்கு தொடா்ந்தவா்கள் ஆரம்பத்தில் உற்சாகமாக செயல்பட்டனா். காலம் செல்ல செல்ல வழக்கில் தொய்வு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வழக்கு தொடா்பாக கையெழுத்து போடுவதற்கு கூட சி.பி.ஐ. தரப்பில் ஆட்கள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவா்கள் தொடா்பாக சமூகத்தில் பொறுப்பில் இருப்பவா்கள் கூட குற்றம் சாட்டி பேசிவந்தனா். ஆனால் ஒருவா் கூட குற்றத்தை நிரூபிக்க வாக்குமூலம் அளிக்க வரவில்லை.



கடந்த 7 ஆண்டுகளாக 2 ஜி வழக்கில் சட்டப்படி செல்லும் ஆதாரங்களுடன் யாராவது வருவாா்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். வேலை நாட்கள், கோடை விடுமுறை என அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருவராவது உாிய ஆவணங்களுடன் வருவாா்கள் என்று காத்திருந்தேன்.

ஒருவா் கூட வராத நிலையில், அனுமானத்தின் அடிப்படையிலே வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

கலைஞா் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டது என்ற புகாருக்கும் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிபதி ஓ.பி. ஷைனி தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி