ஆப்நகரம்

சிறைக்குள் செல்பி: புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த கைதிகள்

சிறைக்குள் செல்பி எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் கைதிகள் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Mar 2018, 4:21 pm
சிறைக்குள் செல்பி எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் கைதிகள் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3 members were caught taking selfies inside the jail
சிறைக்குள் செல்பி: புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த கைதிகள்


உத்திரபிரதேசத்தில், கொலை முற்சியில் ஈடுபட்டதாக விஜய் செளத்ரி என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு முசாபர்நகர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளாா். இவர் ஏற்கனவே கொலை வழக்கில் கைதான தனது இரு நண்பர்களுடன் சிறையில் செல்பி எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த சிறை அதிகாரிகள் கைதிகள் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றியுள்ளனர். விஜய் செளத்ரி வெளியிட்ட புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இதுவே அவர் சிறை அதிகாரிகளிடம் பிடிபட முக்கிய காரணம். கடந்த இரண்டு மாததிற்கு முன்பும் இதுபோன்று புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி கூறுகையில், “இவர்களுக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. இதுதொடர்பான விசாணை நடைபெற்று வருகிறது. சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி